
பிரித்தானியாவில் பலத்த மழை வீழ்ச்சி மற்றும் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை
பிரித்தானியாவில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று இன்று முதல் மீண்டும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன.
இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் நிறுவனம் (EA) வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, 2026 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தென்மேற்கு மற்றும் தெற்கு வேல்ஸில் தினமும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் இப்பகுதிகள் வழக்கத்தை விட 50% அதிக மழைப்பொழிவை பதிவு செய்துள்ளன.
மேலும், தென்கிழக்கு இங்கிலாந்து பெப்ரவரி மாதத்தின் முதல் மூன்று நாட்களிலேயே அதன் சராசரி மாத மழைப்பொழிவில் சுமார் மூன்றில் ஒரு பங்கைக் பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
