மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை மாற்ற நடவடிக்கை

மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை மாற்ற நடவடிக்கை
மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் மையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மத்தள விமான நிலையத்தை ஒரு பொருத்தமான நட்பு நாடுடன் இணைந்து இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது.

மத்தள விமான நிலையம் சுமார் 36.5 பில்லியன் செலவில் கட்டப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்விமான நிலையத்திற்கான செலவீனம் 38.5 பில்லியன் ஆகும் .

எனவே இந்நிறுவனத்தை இலாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக மாற்றுவதற்கு விரும்புகிறோம்” எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Share This