சென்னை அணியின் தொடர்ச்சியான தோல்வி – காரணம் கூறும் ஸ்டீபன் பிளெமிங்

சென்னை அணியின் தொடர்ச்சியான தோல்வி – காரணம் கூறும் ஸ்டீபன் பிளெமிங்

போட்டியின் நடுவில் நாங்கள் சிறப்பாக செயல்படாதது தோல்விக்கு காரணமாகும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். நேற்றையப் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்திருந்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு இது நான்காவது தொடர்ச்சியான தோல்வியாகும். இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

நேற்றைய போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

நேற்றைய போட்டியை பொறுத்தவரை களத்தடுப்பில் நாங்கள் பெரிய தவறுகள் செய்தோம். சில நேரங்களில் அழுத்ததின் கீழ் எப்படி செயல்பட வேண்டும் என்கிற துல்லியம் இல்லை.

பஞ்சாப் வீரர் பிரியன்ஷ் ஆர்யாவின் சிறப்பான இன்னிங்சால் நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளானோம். அவரைக் கட்டுப்படுத்த நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.

அங்குதான் ஆட்டம் எங்களிடமிருந்து விலகிச் சென்றது. நீங்கள் ஐ.பி.எல் தொடரை வெல்ல வேண்டுமானால் பெரும்பாலான ஓட்டங்களை பெறுவதற்கு முதல் மூன்று வீரர்கள் கட்டாயம் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.

நாங்கள் அதைச் செய்யவில்லை. இருப்பினும் நேற்றைய போட்டியில் ஓரளவு நன்றாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டியின் நடுவில் எங்களால் அதே வேகத்தில் விளையாட முடியவில்லை.

காரணம் எதிரணியின் சிறப்பான பந்துவீச்சாக கூட இருந்திருக்கலாம். போட்டியின் நடுவில் நாங்கள் சிறப்பாக செயல்படாதது தோல்விக்கு காரணமாகும்.” என்றார்.

 

 

Share This