கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் சுமார் 30 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் சுமார் 30 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சுமார் 30 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

கொலை நடந்த புதுக்கடை நீதிமன்றத்தில் இருந்தவர்கள், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும்அ பாதுகாப்புப் பணியாளர்களிடமிருந்து வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தக் கொலை தொடர்பாக இதுவரை துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையில் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் சிறப்பு பொலிஸ் குழுக்களை நியமித்துள்ளனர்.

Share This