இலங்கை அணியின் மோசமான சாதனை தென்னாப்பிரிக்கா வசமானது

இலங்கை அணியின் மோசமான சாதனை தென்னாப்பிரிக்கா வசமானது

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இது சர்வதேச ஒருநாள் போட்டியில் அதி கூடிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியாகும்.

முன்னதாக இந்த மோசமான சாதனை இலங்கை வசம் இருந்தது.

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 317 என்ற ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது.

தற்போது அந்த மோசமான சாதனை தென்னாபிரிக்கா அணி வசம் சென்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 414 ஓட்டங்களை குவித்திருந்தது.

இங்கிலாந்து அணிக்காக ஜேக்கப் பெத்தேல் 82 பந்துகளில் 110  ஓட்டங்களும், ஜோ ரூட் 96 பந்துகளில் 100 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.

415 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி 15.5 ஓவர்களில் 72 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் கார்பின் போஷ் 20 ஓட்டங்களையும், கேசவ் மகாராஜ் 17 ஓட்டங்களையும் அதிகபட்மாக பெற்றிருந்தனர்.

இங்கிலாந்து அணி சார்பாக ஜோஃப்ரா ஆர்ச்சர் 18 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

எவ்வாறாயினும், மூன்றுப் போட்டிகள் கொண்ட இந்த தொடரை தென்னாப்பிரிக்கா  இரண்டுக்கு ஒன்று என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This