ஜிம்பாப்வேயிற்கு சுற்றுப்பணம் மேற்கொள்ளும் இலங்கை அணி

ஜிம்பாப்வேயிற்கு சுற்றுப்பணம் மேற்கொள்ளும் இலங்கை அணி

இலங்கை கிரிக்கெட் அணி ஓகஸ்ட் மாத இறுதியில் ஜிம்பாப்வேயிற்கு சுற்றுப்பணம் மேற்கொள்ளவுள்ளது.

இதன்போது இது அணிகளுக்கும் இடையில் இரண்டு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகள் ஓகஸ்ட் 29 மற்றும் 31 ஆகிய திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மூன்றுப் போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் மூன்று, ஆறு மற்றும் ஏழு ஆகிய திகதிகளில் நடைபெறும்.

இந்த போட்டிகள் அனைத்தும் ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை அணியின் இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, கொழும்பில் உள்ள சிங்கள விளையாட்டுக் கழகத்தில் (SSC) மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்ட டி20 போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, ஓகஸ்ட் ஏழாம் திகதி தொடங்கும் இந்தப் போட்டியில், நீலம், பச்சை மற்றும் சாம்பல் நிற அணிகள் இடம்பெறும்.

சமீபத்தில் முடிவடைந்த பங்களாதேஷ் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு கூடுதலாக, உள்நாட்டு கிரிக்கெட் துறையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் புதிய வீரர்கள் இந்தப் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பச் சுற்றின் முடிவில், ஓகஸ்ட் 16ஆம் திகதி எஸ்.எஸ்.சி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This