இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்ற ஜனாதிபதி

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்ற ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் பிராந்தியத்தில் அமைதியை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக உத்தியோகப்பூர்வ அறிக்கையை வெளியிட்ட ஜனாதிபதி, பகைமையை முடிவுக்குக் கொண்டுவர இந்த முக்கியமான நடவடிக்கையை எடுத்ததற்காக இரு நாடுகளையும் பாராட்டினார்.

அப்பாவி உயிர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் நீண்டகால பிராந்திய ஸ்திரத்தன்மையை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும்
ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது,

“போர் நிறுத்தம் என்பது இரு தரப்பிலும் அப்பாவி உயிர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை மட்டுமல்ல,
நமது பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான ஒரு முக்கியமான படியாகும்.

மோதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் எடுத்த முடிவை நான் பாராட்டுகிறேன், மேலும் இந்த முக்கியமான கட்டத்தில் இராஜதந்திரம் மற்றும் நிதானத்தைத் தேர்ந்தெடுப்பதில் உண்மையான அரசியல் திறமையை வெளிப்படுத்தியதற்காக தலைமையையும் பாராட்டுகிறேன்”

தொடர்ச்சியான அமைதி முன்னெடுப்புகளுக்கு இலங்கை தனது உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, மேலும் பிராந்திய நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் இலங்கையின் நெருங்கிய உறவுகளை எடுத்துரைத்த ஜனாதிபதி, போர் நிறுத்தம் தொடர்ச்சியான ஈடுபாட்டின் மூலம் நீண்டகால பிரச்சினைகளுக்கு அமைதியான மற்றும் ஆக்கபூர்வமான தீர்வுக்கு அடித்தளமிடும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

Share This