பிரித்தானியாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

பிரித்தானியாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

பிரித்தானியாவில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அன்று கார்டிப்பின் (Cardiff) ரிவர்சைட் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில்
நிரோதா என அழைக்கப்படும் 32 வயதுடைய நிவுன்ஹெல்லகே தோனா நிரோதா கல்பனி நிவுன்ஹெல்லா படுகொலை செய்யப்பட்டார்.

பிரிந்து வாழ்ந்த தனது மனைவி வேறொருவருடன் பழகியதாக குற்றம் சுமத்தி அவரை வாகன நிறுத்துமிடமொன்றில் 37 வயதுடைய இலங்கையர் கொலை செய்தார்.

கொலைக்குப் பிறகு தனது காரில் வேகமாகத் தப்பிச் சென்ற வேரகலகே, சிறிது நேரத்தில் லொறி ஒன்றின் முன்னால் வீழ்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

எனினும், அவர் மீட்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இரத்தக் கறையுடன் கூடிய கையுறைகளும், கத்திகள் அடங்கிய பொதியும் கண்டெடுக்கப்பட்டன.

விசாரணையில், இந்தத் தம்பதியினர் 2017 ஆம் ஆண்டு இலங்கையில் திருமணம் செய்து கொண்டு, பின்னர் 2022 இல் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தமை தெரியவந்தது.

அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2025 ஏப்ரல் முதல் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதனிடையே நிரோதா தனது சக ஊழியர் ஒருவருடன் பழகத் தொடங்கியதால் வேரகலகே, திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.

“நிரோதா தனது குடும்பத்தினரால் மிகவும் நேசிக்கப்பட்டவர். ஒரு கோழைத்தனமான மற்றும் பொறாமை கொண்ட நபரால் அவரது வாழ்க்கை முடிக்கப்பட்டுள்ளது” என தெற்கு வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

நிரோதாவின் குடும்பத்தினர் அவருக்கு விடுத்துள்ள அஞ்சலியில், அவர் அனைவரிடமும் அன்பாகவ பழகிய ஒரு சிறந்த பெண் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல மாதங்களாக நிரோதாவைப் பிரிந்து வாழ்ந்த திசர வேரகலகே என்ற நபர், ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டை மறுத்த போதிலும், பின்னர் ஜனவரி மாதம் நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கார்டிப் கிரவுன் நீதிமன்றத்தில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி டேனியல் வில்லியம்ஸ், வேரகலகேயின் “கொடூரமான சுயநலம்” நிரோதாவின் வாழ்க்கையைச் சுருக்கிவிட்டதாகக் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )