இவ்வாண்டில் வலுவான மீட்சியில் இலங்கை கவனம் செலுத்தும்
இலங்கை 2024 ஆம் ஆண்டு 5 வீத உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியை பதிவு செய்த பின்னர் இந்த ஆண்டு வலுவான மீட்சியில் கவனம் செலுத்தும் எனவும் , இது கடந்த ஏழு ஆண்டுகளில் மிக உயர்ந்ததாக இருக்கும் எனவும் இலங்கை மத்திய வங்கித் தலைவர் பி.நந்தலால் வீரசிங்க இன்று (8) தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம் 2022ஆம் ஆண்டில் கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ் பாதிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் 2.9 பில்லியன் டொலர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடனுதவியை பெற்று, டிசம்பர் மாதத்தில் 25 பில்லியன் டொலர் கடனை மறுசீரமைத்த பின்னர் எதிர்பார்த்ததை விட வேகமான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்தது.
2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பொருளாதாரம் 5.2 வீத வளர்ச்சியடைந்தது, இது இலங்கை மத்திய வங்கியின் (CBSL) 3 வீத மதிப்பீட்டை விட அதிகமாகும் என்று ஆளுநர் பி.நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்கம் நேர்மறையான பகுதியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பிறகு CBSL 5 வீத பணவீக்க விகிதத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.
2025ஆம் ஆண்டுக்கும் அதற்கு அப்பாலுக்குமான இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.