இலங்கை – இந்திய ரூபாயில் வர்த்தகம் ; முக்கிய கட்டத்தை நோக்கி நகரும் கலந்துரையாடல்

இலங்கை – இந்திய ரூபாயில் வர்த்தகம் ; முக்கிய கட்டத்தை நோக்கி நகரும் கலந்துரையாடல்
இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக விரிவாக்கத்தை மேற்கொள்ள இருநாடுகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், இதற்காக இலங்கை மற்றும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ரூபாய்களை பயன்படுத்தவும் உத்தேசித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அரசாங்கத்தின் காலப்பகுதியில் இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ பயணங்களின் போது, இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு டொலர்களுக்கு பதிலாக இருநாட்டு நாணயங்களை பயன்படுத்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்திலும் இந்த விடயம் தொடர்பில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன.
அதன் அடுத்தகட்டமாக நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
INR-LKR வர்த்தக தீர்வு என் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்றுள்ள இந்த கலந்துரையாடலில் இருநாட்டு வர்த்தகத்தில் டொலர்களுக்கு பதிலாக ரூபாய்களை எவ்வாறு பயன்படுத்துவது எனக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கலந்க் கலந்துரையாடலில் உயர் ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, மத்திய வங்கியின் அதிகாரிகள் இந்திய ரிசவ் வங்கியின் அதிகாரிகள் உட்பட இருநாட்டு துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதுடன், அடுத்தகட்ட கலந்துரையாடல் விரைவில் நடைபெற உள்ளன. தற்போது வரை நடைபெற்றுள்ள கலந்துரையாடலில் பல சாதகமான காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வர்த்தக இரு நாட்டு நாணய பயன்பாட்டுக்காக அந்திய செலாவணி சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
Share This