பேரிடர் உயிரிழப்பு 474ஆக அதிகரிப்பு – 356 பேரை காணவில்லை

பேரிடர் உயிரிழப்பு 474ஆக அதிகரிப்பு – 356 பேரை காணவில்லை

நாட்டில் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (03) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 356 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 118  உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 89 பேரும், பதுளை மாவட்டத்தில் 83 பேரும், குருநாகலையில் 53 பேரும், கேகாலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 29 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 28 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 171 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 73 பேரும், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேரும், பதுளையைச் சேர்ந்த 28 பேரும், குருநாகலைச் சேர்ந்த 27 பேரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )