
22 மாவட்டங்கள் தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
இலங்கை அரசாங்கம் 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புகளைப் பதிவுசெய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் விதிகளின் கீழ் 22 நிர்வாக மாவட்டங்களை தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக நாடு முழுவதும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ஏற்பட்ட பேரிழப்புகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் 2, அன்று வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி எண். 2465/08 இன் படி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக கண்டி, நுவரெலியா, பதுளை, குருநாகல், மாத்தளை, கேகாலை, கம்பஹா, முல்லைத்தீவு, அநுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, மன்னார், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா, மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை பேரிடர் பாதித்த பகுதிகளில் இறப்புகளைப் பதிவு செய்வது உள்ளிட்ட நிர்வாக செயன்முறைகளை விரைவுபடுத்த உதவுகிறது.
மேலும் நாடு எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடியின் அளவைக் குறிக்கிறது.
