நாடு முழுவதும் குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம் – பொது பாதுகாப்பு அமைச்சர்

நாடு முழுவதும் குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம் – பொது பாதுகாப்பு அமைச்சர்

நாடு முழுவதும் நிகழும் குற்றங்கள் மற்றும் கொலைகளை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

குருநாகலில் உள்ள வெஹெர பொலிஸ் வளாகத்தில் வடமேற்கு மாகாண குற்றப்பிரிவைத் திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாடு முழுவதும் நிகழும் குற்றங்கள் மற்றும் கொலைகள் இடம்பெற்று வருகின்றன. அதைத் தீர்க்க முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து ஒரு சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஊடகங்கள் இதை வெளியிடும் நிலையில் இல்லை. தற்போது, நாடு முழுவதும் பதினைந்து குழுக்கள் இயங்கி வருகின்றன. கூடுதலாக, ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் ஒரு குழு செயல்பட்டு வருகிறது.

சில பாதாள உலகத் தலைவர்களிடையே கொலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த மனிதக் கொலைகளை அரசாங்கம் புறக்கணிக்காது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This