யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

நல்லூர் தேர்த்திருவிழாவினையொட்டி நாளை யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் (21.08.2025) வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றது.

இதனையொட்டி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கவேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் பிரதமரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்திருந்தனர்.

இதன்பிரகாரம், உடனடியாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமது கோரிக்கையினை ஏற்று நாளைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக உளப்பூர்வமான நன்றிகளை பிரதமருக்கு தெரிவித்துக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்தனர்.

Share This