தோட்ட வைத்தியசாலைகள் தொடர்பில் விசேட அவதானம்

எதிர்வரும் நாட்களில் தோட்ட வைத்தியசாலைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தோட்ட வைத்தியசாலைகளுக்கான வசதிகள் மற்றும் ஊழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று (11) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
இம்முறை வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தோட்ட நிறுவனங்களுடன் தனித்தனியாக கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளாந்த கொடுப்பனவு மாத்திரம் அல்ல. தோட்டத் நிறுவனங்களில் உள்ள சுகாதார வசதிகள், குழந்தைகளின் கல்வி, தொழில் வாய்ப்பு தொடர்பில் நாங்கள் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகிறோம்.
தோட்ட வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகள், ஊழியர்கள் ஆகியவை தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
எதிர்வரும் நாட்களில் தோட்ட வைத்தியசாலைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.