
உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
பேரிடர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, பரீட்சைகள் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில், பரீட்சை பணிகளை ஒருங்கிணைக்க 325 இணைப்பு நிலையங்கள் செயற்படும்.
விடைத்தாள்களைச் சேகரிப்பதற்காக 32 பிராந்திய சேகரிப்பு நிலையங்கள் இயங்கும் என பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
