உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் பயன்படுத்தாத சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபாநாயகருக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் பயன்படுத்தவில்லை என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அவர் 10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.
எனினும், அன்று தொடக்கம் இன்று வரையில் அவர் நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே உள்ள சபாநாயகர் இல்லத்தை பயன்படுத்தவில்லை.
நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் தினங்களில் மாத்திரமன்றி இடம்பெறாத சில தினங்களிலும் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தருவதாகவும் சபாநாயர் எங்கு தங்கியுள்ளார் என்பது தொடர்பில் நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் தெரியாது என அறியக்கிடைத்துள்ளது.
ஜகத் விக்கிரமரத்ன கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொலநறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான நிலையில் அசோக ரன்வல இராஜினாமா செய்ததையடுத்து சபாநாயகராக பதவியேற்றார்.