தென்கொரியாவின் புதிய இடைக்கால ஜனாதிபதி
தென்கொரிய இடைக்கால ஜனாதிபதி ஹான் டக்-சூ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதவிக்கு நிதியமைச்சர் சோய் சாங்-மோக் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்கொரிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கத்தால் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஹான் டக்-சூ இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தென் கொரியா ஜனநாயக நாடாக மாறிய பின்னர் பதில் ஜனாதிபதி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதன்முறை.
முன்னாள் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் ஐப் போன்றே ஹானின் பதவி நீக்கம் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து தீர்ப்பளிக்க 180 நாட்கள் உள்ளது.
இந்நிலையில் தேசிய சட்டமன்றத்தின் முடிவை மதிக்கிறேன் ஹான் வெள்ளிக்கிழமை கூறினார், அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்ச்சையை ஏற்படுத்தாது தனது பணியை இடைநிறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.