சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது மரணம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், சித்ராவின் தந்தையும் ஓய்வுப்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருமான காமராஜ் சென்னை திருவான்மியூரிலுள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.