நிலாந்தி கோட்டஹச்சியை அவதூறாக பேசிய மொட்டுக்கட்சி உறுப்பினர் கைது

நிலாந்தி கோட்டஹச்சியை அவதூறாக பேசிய மொட்டுக்கட்சி உறுப்பினர் கைது

தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியை பற்றி சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக களுத்துறை – மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர நமுனி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான ரவீந்திர நமுனி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அவதூறான கருத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி அரசாங்க நாடாளுமன்ற
உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சி தனது சட்டத்தரணி ஊடாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்
கடந்த செவ்வாய்க்கிழமை (31.12.2024) முறைப்பாடு செய்திருந்தார்.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர ரமுனி , அண்மையில் தனது முகப்புத்தகத்தில்
நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சியை இழிவுபடுத்தும் வகையில் பதிவொன்றை இட்டிருந்தார்.

பின்னர் அந்த பதிவை அன்றே நீக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This