ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

2025 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்க்குமாறும் துமிந்த திஸாநாயக்க எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பல்வேறு முரண்பாடுகளை சுமுகமான முறையில் தீர்த்து கட்சியை பலப்படுத்தும் வகையில் புதிய பயணத்தை புத்தாண்டில் ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், பல்வேறு காரணங்களால் அரசியலில் இருந்து விலகிய அல்லது வேறு கட்சிகளில் இணைந்துள்ள அனைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரையும் இந்த முயற்சியில் கட்சியுடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Share This