
சூப்பர் டீசலின் விலையை உயர்த்திய சினோபெக்
சினோபெக் நிறுவனம் ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலையை இன்று முதல் 28 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதற்கமைய அதன் புதிய விலை 600 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை விலைகளுக்கு ஏற்ப, அரசாங்கத்தின் அனுமதியுடன் பிரீமியம் ரக எரிபொருட்களின் விலைகள் மாற்றியமைக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளில் மாற்றங்கள் ஏதுமின்றி அரசாங்கத்தின் விலையே பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
