கம்பஹா பொது பேருந்து நிலையம் அருகே துப்பாக்கிச் சூடு

கம்பஹா நகரில் உள்ள பொது பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சிறிய லொறி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், லொறியில் இருந்த இருவர் பாதுகாப்புக்காக வாகனத்தை விட்டு இறங்கி அருகிலுள்ள கடைக்குள் ஓடிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.