வெல்லவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

வெல்லவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்தப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த கணவன் மனைவி மீது இனந்தெரியாத ஒருவரால் நேற்று (24) இரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரலுவாவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கணவனும் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் 30 வயதுடைய பெண் எனவும், அவர்கள் அப்பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த திருமணமான தம்பதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணமோ, சந்தேகநபர்கள் தொடர்பிலான தகவலோ இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This