காலி – அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு

காலி – அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு

காலி, அக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (23) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அதிகாலை ஐந்து மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This