ஹிரண பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

ஹிரண – மாலமுல்ல பகுதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 32 வயதுடைய நபர் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ அல்லது சந்தேக நபர் பற்றிய தகவலோ வெளியாகவில்லை.
இந்நிலையில், சந்தேக நபரைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
குடு சலிந்துவிற்கும் நிலங்கவிற்கும் இடையிலான மோதலில் குடு சலிந்துவின் தரப்பில் ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.