அம்பலாந்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் இன்று (31) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டில் இருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் அம்பலந்தோட்டை கொக்கல்ல பகுதியைச் சேர்ந்தவர்.
தற்போதைய விசாரணைகளில், தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.