
ஜேர்மனியில் மக்கள் மீது மோதிய கார் – 20 பேர் காயம்
ஜேர்மனியின் மியூனிக் நகரில் மக்கள் மீது காரொன்று மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
தொழிற்சங்க போராட்டம் இடம்பெற்றிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கார் சாரதி ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி,இன்று வெள்ளிக்கிழமை மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுடன் கலந்துரையாடவுள்ள நிலையில் அந்த பகுதியில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES உலகம்
