அதிக வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் – வைத்தியசாலையில் அனுமதி

அதிக வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் – வைத்தியசாலையில் அனுமதி

கலஹா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் பலர்  அதிக வெப்பநிலை காரணமாக  பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் கலஹா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடும் வெப்பமான காலநிலையினால் பாடசாலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சு, மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு நேற்று (20) பரிந்துரைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This