“நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும் திருப்தி” – ராஷ்மிகா மந்தனா

“நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும் திருப்தி” – ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையை ஜாவா எனும் திரைப்படமாக இயக்கியுள்ளார் லக்ஷ்மன் உடேகர். இத் திரைப்படத்தில் மகாராணி யேசுபாயாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

அடுத்த மாதம் 14 ஆம் திகதி வெளியாகவுள்ள இப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய ராஷ்மிகா மந்தனா, “மராட்டிய மகாராணியாக நடித்தது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.

இதை பெருமையான விடயமாக பார்க்கிறேன். இப் படத்துக்குப் பின் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும் எனக்கு திருப்திதான் என இயக்குநரிடம் கூறினேன்.

நான் அடிக்கடி அழுக மாட்டேன். ஆனால், இப் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது இயல்பாகவே உணர்ச்சிவசப்பட்டு விடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This