சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கடந்த 06 ஆம் திகதி நுகேகொடவில் உள்ள அவரது இல்லத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
2022 ஆம் ஆண்டு போராட்டங்களின் போது சேதமடைந்த செவனகலையில் உள்ள மகாவலி அதிகாரசபையின் காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்துக்கு இழப்பீடு பெற அவர் முயன்ற போது அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து , இழப்பீடு பெற அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க தமது பதவியைப் பயன்படுத்தியமை மற்றும் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.