உப்பு விலை குறைப்பு

உப்பு விலை குறைப்பு

அயடின் கலந்த லக் உப்பின் விலையைக் லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளது.

நிறுவனத்தின் தலைவர் இன்று புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

இதன்படி, 400 கிராம் அயடின் கலந்த உப்பு தூள் பொதியொன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

1 கிலோகிராம் அயடின் கலந்த உப்பு தூள் பொதியொன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த வாரம் முதல் 400 கிராம் உப்பு தூள் பொதியொன்று 100 ரூபாவுக்கும், 1 கிலோகிராம் உப்பு தூள் பொதியொன்று 200 ரூபாவுக்கும், 1 கிலோகிராம் கல் உப்பு தூள் பொதியொன்று 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும்

Share This