இம்தியாஸ் பாக்கீர் மாக்கரின் இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த சஜித்

தமது கட்சியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கரின் பதவி துறப்பு கடிதத்தை கட்சி ஏற்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘இம்தியாஸ் பாக்கீர் மக்கார் சிரேஷ்ட தலைவர், அவர் பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார்.
காரணம் குறிப்பிடப்படவில்லை. அவரைபோல சிரேஷ்ட தலைவர் ஒருவர் எமது கட்சியில் இருக்க வேண்டும். எனவே, இராஜினாமா கடிதம் ஏற்கப்படவில்லை.
எமது கட்சிக்குள் பிரச்சினை இல்லை, எனவே, கட்சி பிளவு படாது. பதவி விலகல் கடிதம் ஏற்கப்படவில்லை என்பதால் அவரே தற்போதைய தவிசாளர், அவருடன் நான் பேச்சு நடத்தவுள்ளேன்.” – என்றார்.