உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் அண்மைய தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது.

உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததுடன் ஆறு குழந்தைகள் உட்பட 40 பேர் காயமடைந்தனர்.

கார்கிவ் மற்றும் ஒடேசா உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனுக்கான இராணுவ உதவி மற்றும் உளவுத்துறை பகிர்வை அமெரிக்கா இடைநிறுத்தியதால், அண்மைய நாட்களில் ரஷ்ய தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

Share This