வாக்குரிமையை பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுமக்களின் ஆர்வம் குறைவாக இருந்தாலும், 06 ஆம் திகதி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பல்வேறு காரணங்களால், உள்ளூராட்சித் தேர்தல்கள் குறித்த பொதுமக்களின் ஆர்வம் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாக
பெப்ரல் அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தேர்தல் திகதி நெருங்கையில் இந்த நிலைமை மாறும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.