அரச சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கான விலை மனு கோரல்

அரச சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கான விலை மனு கோரல்

ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான 18 அதி சொகுசு வாகனங்கள், சேவையிலிருந்து நீக்கப்பட்ட எட்டு வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்வதற்கான விலை மனு கோரலை ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ளது.

அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கும் நிதிப் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்குமான நடவடிக்கையாக, ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான பல வாகனங்களை விற்பனை செய்யும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா லேண்ட் க்ரஷர் V8, லேண்ட் ரோவர் டிஃபென்டர் மற்றும் பென்ஸ் கார் உள்ளிட்ட பல வாகனங்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This