இலங்கைக்கு புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கும் பணம் சாதனை அளவை எட்டியது

இலங்கைக்கு புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கும் பணம் சாதனை அளவை எட்டியது

கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு 680.8 மில்லின் அமெரிக்க டொலர்கள் புலம்பெயர் தொழிலாளர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையில் மொத்த 5.116 பில்லியன் அமெரிக்க டொலர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 4.28 பில்லியன் டொலரை விட 19.3 வீதம் அதிகமாகும்.

இதேபோல், இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான பணம் அனுப்புதல் மற்றும் தொழிலாளர் இடம்பெயர்வு குறித்த முதல் காலாண்டு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2025 ஜனவரி முதல் மே வரையான காலகட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு 3,102.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஜனவரி – மே வரையான காலகட்டத்தில் வெளிநாட்டு வேலைக்குச் சென்ற மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 115,022 ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் பெறப்பட்ட மொத்த பண அனுப்பீடுகளின் மதிப்பு 1.8144 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பெறப்பட்ட அதிகபட்ச பண அனுப்பீடுகள் குவைத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து பணம் அனுப்பீடுகள் பதிவாகியுள்ளன.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 69,682 என்பதுடன் மாத சராசரி 23,227 ஆகும்.

Share This