புதிய வாகனங்களை பதிவு செய்தல் – விரும்பிய எண்ணை பெற எவ்வளவு செலுத்த வேண்டும்?

புதிய வாகனங்களை பதிவு செய்தல் – விரும்பிய எண்ணை பெற எவ்வளவு செலுத்த வேண்டும்?

இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது பிரபலமான எண்களைப் பெறுவதற்கான கட்டணங்கள் தொடர்பில் இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, 1 முதல் 999 வரை உள்ள எண்ணைப் பெற, ஒரு இலட்சம் ரூபாய், 1000 முதல் 1999 வரையிலான எண்ணைப் பெற, இரண்டு இலட்சம் ரூபாய், 2000 முதல் 2999 வரையிலான எண்ணைப் பெற, மூன்று இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.

அதேவேளை, 3000 முதல் 3999 வரையிலான எண்ணைப் பெற, நான்கு இலட்சம் ரூபாய் மற்றும் 4000 முதல் 4999 வரையிலான எண்ணைப் பெற, ஐந்து இலட்சம் ரூபாய் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு செலுத்தப்பட வேண்டும்.

மேலும் 5000 முதல் 9999 வரை விருப்பமான எண்ணைப் பெற கொள்வனவாளர்கள் பத்து இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மீதமுள்ள எண்கள், பத்து இலட்சம் செலுத்தி பெற வேண்டிய சூப்பர் எண் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கமைய வாகன இறக்குமதி அதிகரித்து வருவதால், பதிவு செய்யும் போது பிரபலமான எண்களைப் பெறுவதற்கான தேவை அதிகமாக இருப்பதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, வாகனப் பதிவு வரிசையில் தொடர்புடைய எண்கள் இலவசமாக வழங்கப்பட்டாலும், பலர் வெற்றி எண்ணை அல்லது அவர்கள் எதிர்பார்க்கும் கவர்ச்சிகரமான எண்ணைப் பெற பணம் செலுத்த வேண்டும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க கூறியுள்ளார்.

Share This