ஈரானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டது – டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டது – டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் ஏற்கனவே ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

போரின் ஆரம்ப நாட்களில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் ஈரான் ஏற்கனவே ஆட்சி மாற்றத்தை” சந்தித்துள்ளது என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்குப் பிறகு ஈரானின் உச்ச தலைவரான அவரது மகன் மொஜ்தபா கமேனி குறித்த தன்னிடம் எந்த தகவலும் இல்லை என்றும் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், ஈரானில் பல இலக்குகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்கா ஈரானுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படுவது கிட்டத்தட்ட உறுதி என்றும், ஆனால் அது நடக்காமல் போவதற்கும் வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். இருப்பினும், ஈரானில் அமெரிக்கா “ஆட்சி மாற்றத்தை” சாதித்துவிட்டதாக அவர் கூறினார்.

இதனிடையே, ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த ஒரு தனிப் பேட்டியில், ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற விரும்புவதாகவும், கார்க் தீவில் உள்ள ஈரானிய ஏற்றுமதி மையத்தை அமெரிக்காவால் கைப்பற்ற முடியும் என்றும் டிரம்ப் கூறினார்.

“உண்மையைச் சொல்லப்போனால், ஈரானில் உள்ள எண்ணெயைக் கைப்பற்றுவதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.

ஆனால், அமெரிக்காவில் உள்ள சில முட்டாள்கள், ‘நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். உண்மையில் அவர்களே முட்டாள்கள்,” என்று டிரம்ப் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறினார்.

இந்த நடவடிக்கை கார்க் தீவைக் கைப்பற்றுவதாக அமையலாம் என அவர் குறிப்பிட்டார். ஒருவேளை நாங்கள் கார்க் தீவைக் கைப்பற்றலாம், அல்லது கைப்பற்றாமலும் போகலாம்.

எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன… அப்படியென்றால், நாங்கள் அங்கே [கார்க் தீவில்] சிறிது காலம் இருக்க வேண்டியிருக்கும் என டிரம்ப் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )