சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆட்சேர்ப்பு

சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆட்சேர்ப்பு

சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதத்திற்குள் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (09.02) அறுவை சிகிச்சை பிரிவொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதத்திற்குள் 3,500 தாதியர்களையும் 976 குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து மருத்துவர்களும் நாடு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

இதேவேளை, பல்வேறு வைத்தியசாலைகளில் தொடர்புடைய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக சுமார் இருபதாயிரம் இருதய நோயாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான நிபுணர் வைத்தியர் சமல் சஞ்சீவ, தெரிவித்தார்.

 

Share This