மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா

மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா

லக்ஸ்மன் உடேகர் இயக்கத்தில்  தினேஷ் விஜன் தயாரிப்பில் மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்தப் புதல்வன் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றைக் கருவாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘சாவா’.

இப் படத்தில் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடிகர் விக்கி கவுசலும் அவரது மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர்.

இப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அடுத்த மாதம் 14 ஆம் திகதி இப் படம் வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

நாளை படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ள நிலையில், ராஷ்மிகாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Share This