ரணிலின் உடல்நிலை “திருப்திகரமான நிலைக்கு” முன்னேறியுள்ளது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை “திருப்திகரமான நிலைக்கு” முன்னேறியுள்ளதாகத் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் இயக்குநர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தீவிர கண்காணிப்பில் உள்ள விக்ரமசிங்கவை, சிறப்பு வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் நாளை நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு தகுதியானவரா என்பது குறித்து இன்று மாலை இடம்பெறும் கலந்துரையாடலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
லண்டனில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் நாளை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உடல்நிலை மோசமானதை அடுத்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பித்தக்கது.
ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு நாளை (26) மீண்டும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.