ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் மிகுந்த சோர்வு காரணமாக ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்த  ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசியவைத்தியசாலையில்  இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் கொழும்பு  தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்தனர்.

Share This