இந்திய வெளியுறவு அமைச்சருடன் ரணில் சந்திப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.
எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து அவர்கள் கவனம் செலுத்தினர்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினர்.
கடல்சார் கூட்டாண்மை மாநாட்டிற்காக தற்போது ஓமானில் உள்ள விக்கிரமசிங்க, கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை கையாள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.