அரச வைத்திய அதிகாரிகளுக்கு ரணில் ஆதரவு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (5) தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள அலுவலகத்தில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகளுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கான முன்மொழிவுகள் மற்றும் திட்ட செயல்முறையை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்துள்ளது.
அரச வைத்தியர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளில் பின்வருவன அடங்கும்:
ஒரு மணி நேரத்திற்கு வழங்கப்படும் அடிப்படை சம்பளத்தில் 1/80 பங்கை கூடுதல் கடமைப் படியாகப் பராமரிக்கவும், விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பணிபுரிவதற்காக வழங்கப்படும் அடிப்படை சம்பளத்தில் 1/20 பங்கைப் பராமரிக்கவும், அதற்கேற்ப அரச சேவையின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் முடிவை செயல்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.