நேபாள பிரதமரை சந்தித்த ரணில் விக்ரமசிங்க

நேபாள பிரதமரை சந்தித்த ரணில் விக்ரமசிங்க

நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு காத்மாண்டுவில் இன்று காலை இடம்பெற்றதாக ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க நேபாள பிரதமருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க நேபாளத்திற்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This