‘பத்திக்குச்சி’ பாடலின் ரேஸிங் வெர்ஷன்… இன்று மாலை ரிலீஸ்

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.
இப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர்.
அண்மையில் இப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் படம் எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந் நிலையில் படத்தின் முதல் பாடலான சவதீகா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் படத்தின் அடுத்த பாடலான பத்திக்கிச்சு பாடலும் வெளியானது.
திரைப்படம் வெகு விரைவில் வெளியாகவுள்ளதால் பத்திக்குச்சி பாடலை அஜித் குமார் ரேஸிங் காணொளியுடன் ஒரு வீடியோவை இன்று மாலை வெளியிடுவதாக படக்குழு கூறியுள்ளது.