மின் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும்

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும்

2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு தொடர்பில் அண்மையில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

மின் கட்டணங்களில் 18.3% அதிகரிப்பை இலங்கை மின்சார முன்மொழிந்தது. முன்மொழியப்பட்ட வீதம் இந்த ஆண்டு ஜனவரியில் செயற்படுத்தப்பட்ட கட்டணத்தை விட 5.4% குறைவு எனவும் மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This