யாழில் ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்குமாறு கோரி போராட்டம்

பட்டதாரி நியமனத்தில் உள்ளிர்க்கப்பட்டு பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் வட க்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று (08) இடம்பெற்றது.
நாடு முழுவதிலுமுள்ள 18 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரிகளே இவ்வாறு மாவட்டம் தோறும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைப் பட்டம் பெற்று தொழில் வாய்ப்புக்களுக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிலையில் நாடுமுழுவதும் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த அவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டனர்.
இதன் காரணமாக இருவேறு நிலைகளில் தமது பதவியும் சேவையும் இருப்பதால் பல்வேறு இடர்பாடுகளை நாம் நாளாந்தம் மனதளவிலும் பல்வேறு துயரங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
எனவே எமது கோரிக்கைக்கு தீர்வை கோரி நாம் இன்று வடக்கின் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம். முன்பதாக யாழ் மாவட்டசெயலகம் முன்பாக ஒன்றுகூடிய குறித்த ஆசிரியர்கள் வடக்கின் ஆளுநர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
ஆளுநர் சந்திப்புக்காக ஆசிரியர் சார்பில் மூவர் அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்ட நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் அவதாம் செலுத்துவதாக் தெரிவித்திருந்தமை குறிடத்தக்கது.