பிரித்தானியாவில் ‘கறுப்பு ஜூலை’ இனப்படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவில் ‘கறுப்பு ஜூலை’ இனப்படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவில் (United Kingdom) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டதுடன், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் இடம்பெற்றது.

இதனை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்தது.

பிரித்தானிய நாடாளுமன்ற சத்துக்கத்தில் நடைபெற்ற இப்பேரணியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்து தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை குறித்திடத்தக்கது.

Share This